பத்மா.சோமகாந்தன்:

பெயர்: பத்மா சோமகாந்தன்
புனைபெயர்: புதுமைப்பிரியை
பிறந்த இடம்: வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம்.

 

சிறுகதைத் தொகுப்புகள்:
  • கடவுளின் பூக்கள் - (1993)
  • புதியவார்ப்புக்கள் - (1997) - தமிழ்நாடு கோயம்புத்தூர் லில்லி தேவசிகாமணி இலக்கிய அமைப்பின்
    அவ்வாண்டின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது.

இவர்பற்றி:

  • 1950களின் முற்பகுதியல் தமது மாணவப் பருவத்தில் எழுத்துலகப் பிரவேசம் செய்த இவர், அக்காலத்தில் 'சுதந்திரன்' நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசைப்பெற்றவர். சிறுகதை, கவிதை, சிறவர் இலக்கியம், இலக்கியக்கட்டுரைகள், பெண்உரிமைக்கான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருபவர். மூன்று தசாப்தங்களுக்கு மேல் ஆசிரியராக, கல்லூரி அதிபராக கல்விப்பணி ஆற்றியபின், இப்பொழுது கொழும்பில் 'பெண்ணின் குரல்' சஞ்சிகையாசிரியராக பணியாற்றுகிறார்.